
செய்திகள் மலேசியா
வட மலேசிய பல்கலைக்கழக மாணவர் மரணம் 2 பேருந்து ஓட்டுநர்களிடமிருந்து போலிசார் வாக்குமூலம் பதிவு
குபாங் பாசு:
வட மலேசிய பல்கலைக்கழக மாணவர் மரணம் 2 பேருந்து ஓட்டுநர்களிடமிருந்து போலிசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
குபாங் பாசு போலிஸ் தலைவர் ரட்ஸி அப்துல் ரஹிம் இதனை கூறினார்.
சின்டோக்கில் உள்ள ஜாலான் பெர்சியாரன் பெர்டானா பேருந்து நிறுத்தத்திற்கு முன் விபத்து நிகழ்ந்தது.
இந்த விபத்தில் வட மலேசிய பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மரணமடைந்தார்.
இவ்விபத்தில் தொடர்புடைய இரண்டு பேருந்து ஓட்டுநர்களிடமிருந்து போலிசார் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர்.
மேலும் முன்பக்கத்தில் பேருந்தை ஓட்டி வந்த 37 வயது நபர் நேற்று கைது செய்யப்பட்டார். அதே நேரத்தில் விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 32 வயது பேருந்து ஓட்டுநர் இன்று பிற்பகல் சுமார் 4.30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
அந்த நபர் தனது வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் விடுவிக்கப்பட்டார், மேலும் சிறுநீர் பரிசோதனை முடிவுகளும் எதிர்மறையாக இருந்தன என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm