நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாலியல் துன்புறுத்தல் விவகாரம் கெடாவில் சீனப் பள்ளி ஆசிரியர் கைது

அலோர்ஸ்டார்: 

கெடாவின் அலோர் ஸ்டார் பகுதியில் உள்ள கீட் ஹ்வா தனியார் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர், மாணவி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து போலிசாரால் கைது செய்யப்பட்டார்.

பள்ளி நிர்வாகம் ஒரு சிறப்புக் குழுவை அமைப்பதாக அறிவித்துள்ள.

மேலும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை விசாரித்து இடைநீக்கம் செய்ய அதிகாரிகளுடன் ஒத்துழைத்து வருகிறது.

பள்ளியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி,

ஒரு மாணவி  பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக ஒரு ஆசிரியருக்கு எதிராக புகார் அளித்துள்ளதாக அப்பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.

பள்ளி தலைமையாசிரியர் மருத்துவ விடுப்பில் இருந்ததால், பள்ளியின் மூத்த உதவியாளர் குற்றச்சாட்டுகள் தொடர்பான தகவல்களைச் சேகரித்து பள்ளி நிர்வாகக் குழுவிடம் தெரிவித்தது.

பின்னர் பள்ளி நிர்வாகக் குழு, பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பெற்றோர்-ஆசிரியர் சங்கம்,  முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு சிறப்புக் குழுவை அமைத்தது.

அந்தக் குழு இன்று காலை 10 மணிக்கு அவசரக் கூட்டத்தை நடத்தி, பல முக்கிய விஷயங்களை உள்ளடக்கிய அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது.

குறிப்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல், விசாரணை முடியும் வரை அவர் பள்ளி வளாகத்திற்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

-பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset