
செய்திகள் மலேசியா
ஸ்ரீ மூடா வெள்ளப் பிரச்சினைக்கு அலட்சியமே முக்கிய காரணம்; நிரந்தர தீர்வு வேண்டும்: மக்கள் கோரிக்கை
ஷாஆலம்:
ஸ்ரீ மூடா வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.
பல்லின மக்கள் வாழும் ஸ்ரீ மூடாவில் வெள்ளப் பிரச்சினை ஒரு தொடர்கதை ஆகிவிட்டது.
ஒரு சில மணி நேரங்கள் இடைவிடாமல் மழை பெய்தால் ஸ்ரீ முடா குடியிருப்பு பகுதி வெள்ளைக்காடாக மாறிவிடுகிறது.
ஏன் நேற்று இரவு பெய்த மழைக்கு கூட இந்த பகுதியின் பல இடங்களில் வெல்லம் ஏறியது.
அதே வேளையில் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்தால் வெள்ள எச்சரிக்கை ஒலியால் மக்கள் தொடர்ந்து அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்.
இதன் அடிப்படையில் தான் ஸ்ரீ முடாவில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி இன்று தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர்.
யார் யார் வேண்டுமானாலும் குறை கூறலாம். ஆனால் எங்களுக்கு வேண்டியது நிரந்தர தீர்வு மட்டும் தான்.
இதையேதான் நாங்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம்.
மேலும் ஸ்ரீ மூடா வெள்ளப் பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட தரப்பினரின் அலட்சியமும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
இந்த பிரச்சினைக்கு மாநில அரசும் மத்திய அரசும் உடனடியாக உரிய தீர்வை வழங்க வேண்டும்.
இதன் அடிப்படையில் தான் எங்கள் போராட்டம் தொடர்கிறது என்று
ஸ்ரீ மூடா மக்களின் பிரதிநிதியான உமா காந்தன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm