நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிறையில்லாத தேசியக் கொடி விவகாரம்:  சின் சியூ டெய்லி செய்தி நிறுவனம் மன்னிப்பு கோரியது 

கோலாலம்பூர்:

நாளிதழிலின் முதல் பக்கத்தில் பிறையில்லாத தேசியக் கொடி அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது தொடர்பாக சின் சியூ டெய்லி செய்தி நிறுவனம் பேரரசர் சுல்தான் இப்ராஹிமிடம் மன்னிப்பு கோரியுள்ளது. 

இது குறித்து பேரரசரின் ஆலோசனையை ஏற்பதாகவும் பிறையில்லாத தேசியக் கொடி அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது தவறு என்று ஒப்புக் கொண்டதாகவும்  சின் சியூ டெய்லி செய்தி நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாக, வெளியிடுவதற்கு முன்பு உள்ளடக்கத்தை சரிபார்ப்பதில் அதிக எச்சரிக்கையுடனும் இருக்குமாறு சுல்தான் இப்ராஹிம் ஊடகங்களுக்கு நினைவூட்டினார்.

மேலும், முழுமையான உள் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், பிழைக்கு காரணமான ஊழியர்கள் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் நாளிதழ் கூறியது.

இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்க அதன் தலையங்க செயல்முறைகளையும் மிக கவனமாகச் சரிப் பார்க்க இருப்பதாகவும் சின் சியூ டெய்லி தெரிவித்துள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset