
செய்திகள் மலேசியா
ஸ்ரீ மூடா வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு இல்லையென்றால் போராட்டத்தில் குதிப்போம்: மக்கள் கொந்தளிப்பு
ஷா ஆலம்:
ஸ்ரீ மூடா வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு இல்லையென்றால் போராட்டத்தில் குதிப்போம் என்று அந்தப் பகுதி மக்கள் கொந்தளித்துள்ளனர்.
ஸ்ரீ மூடா வெள்ளைப் பிரச்சினை தொடர்ந்து ஒரு தொடர் கதையாகி விட்டது 1995, 2011ஆம் ஆண்டு இப்பகுதியில் பெரிய வெள்ளப் பேரிடர் நிகழ்ந்தது.
அதைத் தொடர்ந்து தற்போது பெரிய மழை பெய்தால் இப்பகுதியில் வெள்ளம் ஏறி விடுகிறது.
கடந்த 10 நாட்களில் மட்டும் இரண்டு முறை இப்பகுதியில் வெள்ளம் ஏறியது. இதனால் இப் பகுதி மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கினர்.
இதன் அடிப்படையில் தான் இன்று மக்கள் ஒன்று கூடி தங்களின் எதிர்ப்புகளை வெளிப்படுத்துகின்றனர்.
இந்த பகுதியில் ஏற்படும் வெள்ளப் பெருக்கின் போது மக்கள் பிரதிநிதிகள் யாரும் எங்களை வந்து சந்திப்பதில்லை.
ஆனால் மற்ற இடங்களில் ஏற்படும் சம்பவங்களுக்கு ஒட்டுமொத்த அரசாங்கமே களத்தில் இறங்குகிறது.
ஸ்ரீ மூடாவும் மலேசியாவில் தான் உள்ளது. இங்கும் மலேசியர்கள் தான் உள்ளனர். ஆனால் எங்களை யாரும் கண்டு கொள்வது இல்லை.
இது தான் இப்பகுதி மக்களின் வேதனையாகும் என்று இப்பகுதியைச் சேர்ந்த உமா காந்தன் கூறினார்.
ஸ்ரீ மூடா மக்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வு வேண்டும். குறிப்பாக இப்பகுதி மக்களை மக்கள் பிரதிநிதிகள் சந்திக்க வேண்டும்.
அதுவும் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் இப் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்.
இல்லை என்றால் இப்பகுதியில் மிகப் பெரிய கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்று உமா காந்தன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm