நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

"Con Mum" படத்தில் தோன்றிய 84 வயது மாதுக்கு 1 வாரத் தடுப்புக்காவல்: சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவு

சிங்கப்பூர்:

Netflix தளத்தில் இடம்பெற்ற "Con Mum" எனும் ஆவணப்படத்தில் தோன்றிய 84 வயது மாதை ஒரு வாரம் தடுப்புக்காவலில் வைக்க சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மோசடிக்குற்றங்கள் புரிந்த சந்தேகத்தில் அவர்மீது 5 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

தற்காப்புத் தரப்பு வழக்கறிஞரின்றி அவர் காணொலி வாயிலாக இன்று நீதிமன்ற விசாரணையில் தோன்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து நேற்று மாலை திரும்பிய அவரிடம் முழுமையாக விசாரணை நடத்த முடியவில்லை என்று அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

எனவே மேலும் ஒரு வாரத்திற்கு அவரைத் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க அவர் அனுமதி கோரினார்.

மாது மீதான நீதிமன்ற விசாரணை மீண்டும் இம்மாதம் 17ஆம் தேதி தொடரும்

அதுவரை அவருக்குப் பிணை மறுக்கப்பட்டுள்ளது.
 
ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset