
செய்திகள் மலேசியா
காஜாங்கில் கடுமையான வெள்ளம்: 15 பேர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர்
காஜாங்:
இன்று அதிகாலை காஜாங்கில் கடுமையான வெள்ளம் ஏற்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட 15 பேர் பத்திரமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர்
சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புத்துறை இதனை தெரிவித்தது
வெள்ளம் மோசமானதை அடுத்து தங்கள் தரப்புக்கு அதிகாலை 3.34 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்
வெள்ள நீர் 1.2 மீட்டர் அளவில் உயர்ந்த நிலையில் அது 12 குடியிருப்புகளை பாதித்தது.
குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் சூழ்ந்துள்ள நீர் மட்டத்தின் உயர்வை தீயணைப்பு, மீட்புப்படை கண்காணித்து வருவதாக துணை இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் கூறினார்
இந்த வெள்ள பேரிடர் காரணமாக எந்தவொரு உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm