நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திருச்சி உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் டத்தோஶ்ரீ சரவணன் வாழ்த்துரை வழங்குவார்: தி மு அப்துல் காதர்

கோலாலம்பூர்:

திருச்சி உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் மஇகா துணைத் தலைவர் டத்தோஶ்ரீ சரவணன் வாழ்த்துரை வழங்கவுள்ளார்.

இம் மாநாட்டின் ஆலோசகர் பேராசிரியர் கவியருவி தி மு அப்துல் காதர் இதனை கூறினார்.

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தினர் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாவது மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளனர்.

இம் மாநாடு  வரும் மே 9,10, 11 தேதிகளில் திருச்சியில் நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கும் நோக்கில் மலேசியாவுக்கு வந்திருக்கிறோம்.

குறிப்பாக மலேசிய இஸ்லாமியக் கல்வி அறவாரியத்தின் தலைவர் டத்தோஶ்ரீ முஹம்மத் இக்பால் தலைமையில் மலேசியப் பேராளர்கள்  இம் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.

அதே வேளையில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ எம். சரவணனையும் நாங்கள் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினோம்.

இம் மாநாட்டில் கலந்து கொள்ள அவர் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும் டத்தோஶ்ரீ சரவணன் அவர்கள் இம் மாநாட்டில் வாழ்த்துரை வழங்குவதாக உறுதி கூறியுள்ளார்.

தமிழ் மொழிக்கும், தமிழ் மாநாடுகளுக்கும் மலேசிய மக்கள் வழமையாக தங்களது வற்றாத ஆதரவு தந்து வருவது உலகறிந்த ஒன்று. அந்த வகையில் மலேசியப் பேராளர்கள் திரளாக இம் மாநாட்டில் கலந்து கொண்டு ஆதரவு தர வேண்டும் என பேராசிரியர் தி மு அப்துல் காதர் கேட்டுக் கொண்டார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset