நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

GOD BLESS... குட் பேட் அக்லி படத்திற்குச் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து

சென்னை: 

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி இன்று உலகம் முழுவதும் வெளியான GOOD BAD UGLY திரைப்படத்திற்குத் தமிழ்ச்சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார் 

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் பிரசன்னா, சுனில், அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மைத்திரி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்திடம் ‘குட் பேட் அக்லி’ படம் ரிலீசாகியுள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்… God Bless” என தெரிவித்தார்

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset