
செய்திகள் மலேசியா
காஜாங்கில் உள்ள கார் உபரிப் பாகங்கள் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
காஜாங்;
இன்று அதிகாலை காஜாங்கில் உள்ள பண்டார் தெக்நோலோஜி காஜாங் பகுதியில் கார் உபரி பாகங்கள் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது
தீ விபத்தைத் தொடர்ந்து தங்கள் தரப்புக்கு காலை 6.05 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படையின் நடவடிக்கை பிரிவு துணை இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் கூறினார்
காஜாங் தீயணைப்பு, மீட்புப்படையைச் சேர்ந்த 17 தீயணைப்பு வீரர்கள், பாங்கி BBP உதவியுடன் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்
சுமார் 40 விழுக்காடு வரை தொழிற்சாலை தீயில் முற்றாக அழிந்தது.
தீ முற்றாக அணைக்கப்பட்டு இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm