நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோயில் இடமாற்ற விவகாரம் குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்படும்: கோபிந்த் சிங்

கோலாலம்பூர்: 

மஸ்ஜித் இந்தியா சாலையில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலை இடமாற்றம் செய்வது குறித்து அமைச்சரவையில் பலமுறை எழுப்பப்பட்டதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.  

இந்த இடமாற்றப் பிரச்சனைக்கு அனைத்துச் சாத்தியமான தீர்வுகளும் அமைதியான முறையில் ஆராயப்படுவதாகக் கோபிந்த் சிங் டியோ உறுதியளித்தார். 

கோவிலை இடமாற்றம் செய்வதற்கு மாற்று நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் சிறந்த நடவடிக்கையைத் தீர்மானிக்க விவாதங்கள் நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.

நாங்கள் ஒரு தீர்மானத்தை நோக்கிச் செயல்படும்போது அனைத்து தரப்பினரும் அமைதியாக இருக்க வேண்டும். 

ஆக்கப்பூர்வமாக தொடர்ந்து ஈடுபடவும் நான் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset