நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புக்கிட் பிந்தாங்கில் பேரரசர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

இன்று காலை பேரரசர் சுல்தான் இப்ராஹிம் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் புக்கிட் பிந்தாங்கைப் பார்வையிட்டார்.

பேரரசர் பிரதமருடனான வாரந்திரச் சந்திப்பிற்கு பின் புக்கிட் பிந்தாங்கைப் பார்வையிட்டதை அவர் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இந்தப் பதிவில், ஜெனிசிஸ் டவர் மற்றும் ஃபாரன்ஹீட் 88 ஷாப்பிங் மால் முன் உள்ள பாதையில் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பிரதமர் அன்வார் புக்கிட் பிந்தாங் வழியாக நடந்து செல்லும் பல புகைப்படங்களும் பகிரப்பட்டுள்ளன.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset