நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

70 ஆண்டுகளுக்குப் பின் கிண்ணத்தை வென்று சாதித்தது நியூகாஸ்டல்

லண்டன்:

கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு பின் கிண்ணத்தை வென்று நியூகாஸ்டல் அணியினர் சாதித்துள்ளனர்.

வெம்பளி அரங்கில் நடைபெற்ற கரபாவ் கிண்ண இறுதியாட்டத்தில் நியூகாஸ்டல் அணியினர் லிவர்பூல் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூகாஸ்டல் அணியினர்  2-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

லிவர்பூல் அணியின் வெற்றி கோல்களை டான் பெர்ன், அலெக்ஸாண்டர் இஷாக் ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து நியூகாஸ்டல் அணியினர் இங்கிலாந்து கரபாவ் கிண்ணத்தை தட்டிச் சென்றனர்.

அதே வேளையில் 1969 ஆண்டில் இருந்து நியூகாஸ்டல் அணியினர் வெல்லும் முதல் கிண்ணம் இதுவாகும்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset