
செய்திகள் விளையாட்டு
மீண்டும் கால் மூட்டு காயம் – சுவிஸ் ஓபன் போட்டியிலிருந்து லீ ஜீ ஜியா விலகல்
கோலாலம்பூர்:
மலேசியாவின் முன்னணி ஆண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் வீரர் லீ ஜீ ஜியா, மீண்டும் ஏற்பட்ட வலதுகால் மூட்டு காயத்தால் அடுத்த வாரம் நடைபெறவுள்ள சுவிட்சர்லாந்து பொது பேட்மிண்டன் (சுவிஸ் ஓபன்) போட்டியில் கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
"வலதுகால் மூட்டு காயம் காரணமாக, பெசல் (Basel) நகரில் நடைபெறும் ஸ்விஸ் ஓபன் போட்டியிலிருந்து ஜீ ஜியா விலகுகிறார் என்பதை உறுதிப்படுத்துகிறோம்,” என்று ‘Team LZJ’ தனது சமூக ஊடக பதிவில் இன்று தெரிவித்துள்ளது.
“காயத்திற்கான மேலதிக சிகிச்சை பெறுவதைத் தொடர்ந்து, எதிர்கால போட்டிகளில் அவரின் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் குறித்து பிறகு அறிவிப்போம்,” என்று அணியின் அறிவிப்பு கூறுகிறது.
முழுமையான உடல் தகுதி பெற முடிவு
உலகின் எட்டாவது நிலை பேட்மிண்டன் வீரரான ஜீ ஜியா, கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த BWF உலகளாவிய தொடரின் இறுதிப் போட்டியில் இக்காயத்திற்கு இலக்கானார்.
26 வயதான இளம் நட்சத்திரம், கடந்த வாரம் ஓர்லீயன்ஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் மீண்டும் பங்கேற்றார். அதையடுத்து, இங்கிலாந்து பொது பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பிலும் விளையாடினார்.
அவர் முதல் சுற்றில் ஹாங்காங்கின் அங்கஸ் என் கா லாங் என்பவரிடம் 16-21, 12-21 என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, உடல்நிலை குறித்து கவனம் செலுத்தி, மேலதிக சிகிச்சை பெற இருக்கிறார்.
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
March 14, 2025, 10:40 am
ஐரோப்பா லீக்: ஏஎஸ் ரோமா தோல்வி
March 14, 2025, 10:37 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: காலிறுதியாட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட்
March 13, 2025, 10:16 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: காலிறுதியாட்டத்தில் அர்செனல்
March 12, 2025, 8:41 am
ஐரோப்பிய சாம்பியன்: லீக் லிவர்பூல் ஏமாற்றம்
March 11, 2025, 9:20 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: நியூகாஸ்டல் வெற்றி
March 11, 2025, 9:18 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: காலிறுதியாட்டத்தில் அல் நசர்
March 10, 2025, 10:30 am