நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

தங்கராஜா சுழற்கிண்ண கால்பந்துப் போட்டியில் பாரதி, பெருவாஸ் தமிழ்ப்பள்ளிகள் வாகை சூடின: 20 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி வழங்கினார் அ.சிவநேசன்

ஈப்போ: 

நான்காவது முறையாக நடைபெற்ற கிந்தா இந்தியர் சங்கத்தின் தங்கராஜா சுழற்கிண்ணம் காற்பந்து விளையாட்டு போட்டியில் ஊத்தான் மெலிந்தாங் பாரதி தமிழ்ப்பள்ளி ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்றது. பெண்கள் பிரிவில் மஞ்சோங்கை சேர்ந்த பெருவாஸ் தமிழ்ப்பள்ளி வெற்றி பெற்றது.

இறுதி ஆட்டத்தில் பாரதி தமிழ்ப்பள்ளி ஹீலிர் பேராக் நோவா ஸ்கோட்சியா 2 தமிழ்ப்பள்ளியை 2- 0 என்ற கோல் எண்ணிக்கையில் தோற்கடித்தது. அதுபோலவே பெண்கள் பிரிவில் பெருவாஸ் தமிழ்ப்பள்ளி 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளியை தோற்கடித்தனர்.

இத்தகைய கால்பந்து  போட்டிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். இதன் வாயிலாக சிறந்த விளையாட்டாளர்கள் மாவட்டம், மாநிலம் மற்றும் நாட்டையும் எதிர்காலத்தில் பிரதிநிதிக்கலாம். இதனால் சம்பந்தப்பட்ட மாணவரின் எதிர்காலம் சுபிட்சமாக இருக்கும் என்று இந்த கால்பந்து போட்டியை தொடக்கி வைத்தபோது பேராக் மாநில இந்திய சமூகநலத்துறை, மனிதவளம், சுகாதாரம், ஒற்றுமைத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசனின் பிரதிநிதியான உ.முத்துசாமி கூறினார்.

இந்த தங்கராஜா சுழல்கிண்ணப் போட்டியில் இம்முறைதான் முதல் முதலாக கடந்த 1987 ல் தேசிய அளவில் இறுதி ஆட்டத்தில் இரண்டாவதாக வென்ற கிந்தா இந்தியர் சங்கத்தின் வெற்றியாளர்கள் சிறப்பிக்கப்பட்டனர். அதே வேளையில் 

இந்த விளையாட்டாளர்களைத் தேடி கண்டு பிடித்து அவர்களை ஒன்றிணைத்து டத்தோ கருத்து தலைமையில் பயிற்சி வழங்கி வழிநடத்தியர் அன்றைய விளையாட்டுத்துறையின் செயலாளர் என்றால் மிகையாகாது. அவரின் சேவையையும் அர்பணிப்பையும் நினைவுகூரும் வகையில் இந்தப்போட்டி இன்னமும் நடத்தப்பட்டு வருகிறது. அவர் மறைந்தாலும் அவரது சேவைக்கு மதிப்பளிக்கப்பட்டு வருகிறது.

இம்முறை நடைபெற்ற போட்டியில் முதல் முறையாக 12 பெண்கள் கால்பந்து குழுவினர் கலந்துகொண்டு வரலாறு படைத்தனர். அதுபோலவே,  ஓர் ஆசிரியை கால்பந்து நடுவராக பணியாற்றி மற்றொரு சாதனையும் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி, இம்முறை ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதல் எட்டு வெற்றிப்பெற்ற குழுவினருக்கு பதக்கம், பந்து பரிசாக வழங்கப்பட்டது. அதோடு, முதல் நான்கு வெற்றி பெற்ற குழுவினருக்கு சுழற்கிண்ணம், வெற்றிக்கிண்ணம், பதக்கம், பணமுடிப்பு, பந்து, சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.

தங்கராஜா காற்பந்து சுழற்கிண்ணம் போட்டியின் தொடக்க விழாவில் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ம.துள்சி, மூலம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் வீ.பவானி, கிந்தா இந்தியர் சங்கத் தலைவர் டத்தோ தங்கராஜா, செயலாளர் எம்.ஆர். முருகன், உதவித்தலைவர்களான நா.லோகநாதன், டாக்டர் சேகர் நாராயணன், பொருளாளர் ஸ்டிபன், செயற்குழு உறுப்பினர்கள், ஈப்போ மாநகர் மன்ற ஊராட்சி உறுப்பினர்களான ப. லோரன்ஸ், கா.சிவம், பேராக் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரிர்கள் மன்ற துணைத் தலைவர் ஆந்திரா காந்தி, தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் முதல் எட்டு இடத்தை பிடித்த தமிழ்ப்பள்ளிகள் பின்வருமாறு: பாரதி தமிழப்பள்ளி, நோவா ஸ்கோட்சியா 2, கிளேபாங் தமிழ்ப்பள்ளி, ஆயர்தாவார், பாத்தாக் ராபிட், செட்டியார் தமிழ்ப்பள்ளி,கம்போங் சீமி ,மகா கணேசா தமிழ்ப்பள்ளியாகும்.

அதுபோலவே, பெண்கள் பிரிவில் முதல் எட்டு இடத்தை வென்ற பள்ளிகள் பின்வருமாறு: பெருவாஸ் தமிழ்ப்பள்ளி, அரசினர் தமிழ்ப்பள்ளி, ஆயர்தாவார், பாத்தாக் ராபிட், கம்பார், செட்டியார், கிளேபாங் மற்றும் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியாகும்.

இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் இரு மாணவர்கள் 8 கோல்களை அடித்து பரிசுகளை வெற்றி பெற்றனர். அவர்களில் எஸ்.தர்ஷன் கிளேபாங் தமிழ்ப்பள்ளி, திவியன் கோத்தபாரு தமிழ்ப்பள்ளி, சிறந்த விளையாட்டாளராக பாரதி் தமி்ழ்ப்பள்ளியின் ஜீவநாதன் தேர்வானார். சிறந்த கோல்காவலராக பாரதி பள்ளியின் லோகேஸ்வரன் வெற்றிப்பெற்றார்.

பெண்கள் பிரிவில் பெருவாஸ் பள்ளியின் திபாஷினி 7 கோல்களை அடித்தார். அதோடு சிறந்த விளையாட்டாளர் பரிசும் அவர் வென்றார். சிறந்த கோல் காவலராக பாரதி தமிழ்ப்பள்ளியின் தனுஷா வென்றார்.

- ஆர். பாலச்சந்தர்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset