
செய்திகள் தமிழ் தொடர்புகள்
எச்ஆர்டி கோர்ப்புடனான சந்திப்பு எதிர்கால திறன்களுடன் இளைஞர்களை மேம்படுத்தும் திட்டங்களுக்கு வழிவகுத்தது: கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ்
கோலாலம்பூர்:
எச்ஆர்டி கோர்ப்புடனான சந்திப்பு எதிர்கால திறன்களுடன் இளைஞர்களை மேம்படுத்தும் திட்டங்களுக்கு வழிவகுத்தது என்று தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.
தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் மலேசியா வந்திருந்தார்.
இந்த பயணத்தின் ஓர் அங்கமாக தமிழக மாணவர்களுடன் அவர் எச்ஆர்டி கோர்ப் தலைமையகத்திற்கு சென்றார்.
எச்ஆர்டி கோர்ப் தலைமை இயக்குனர் டத்தோ வீரா ஷாகுல் தாவூத் அவரையும் மாணாக்கர்களையும் வரவேற்று சிறப்பித்தார்.
மலேசியாவில் எச்ஆர்டி கோர்ப்பின் செயல்பாடுகள் குறித்து அதன் அதிகாரிகள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில் தொழிலாளர் பயிற்சி, திறன் மேம்பாட்டில் அதன் பங்கை ஆராய அரசுப் பள்ளி மாணவர்களுடன் மலேசியாவின் எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தைப் பார்வையிட்டேன்.
வேலை வாய்ப்புத் திறனை மேம்படுத்துவதற்காக பயிற்சித் திட்டங்கள், தொழில்துறை வேலை வாய்ப்புகள், தொழில் பயிற்சிக்கு எச்ஆர்டி கோர்ப் நிதியளிக்கிறது.
கல்வியை மாற்றியமைப்பதும், எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் திறன்களுடன் இளைஞர்களை மேம்படுத்துவது தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினின் இலக்காக உள்ளது.
அதன் அடிப்படையில் எச்ஆர்டி கோர்ப்புடனான சந்திப்பு பெரும் பயனாக இருந்தது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 21, 2025, 10:50 am
சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை: மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி, ஷியா காஜி உள்ளிட்டோர் கைது
June 20, 2025, 3:39 pm
சன் டி.வி. கலாநிதி மாறன் குடும்பத்தில் சண்டை
June 20, 2025, 7:14 am
தமிழகத்தில் ஜூன் 25-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
June 19, 2025, 7:30 pm
ஏடிஜிபி கைதுக்கு உத்தரவிட்ட நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
June 19, 2025, 10:21 am
தமிழர்கள் என்றாலே வெறுப்புடனும் ஒன்றிய அரசு பார்க்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
June 17, 2025, 2:38 pm
சிறுவன் கடத்தல்: நீதிமன்றத்திலேயே கைது செய்யப்பட்ட எடிஜிபி ஜெயராம்
June 16, 2025, 8:49 am
குணா குகையில் 500 ரூபாய் நோட்டுகளை பறக்கவிட்ட குரங்கு: வைரலாகும் காணொலி
June 15, 2025, 5:02 pm