
செய்திகள் உலகம்
சீனாவின் டீப்சீக் செயலியின் பயன்பாட்டிற்கு தென் கொரிய அரசு தடை
சியோல்:
பாதுகாப்பு காரணங்களுக்காக சீனாவின் செயற்கை நுண்ணறிவு செயலியான டீப்சீக் செயலியின் பயன்பாட்டிற்கு தென் கொரிய அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது.
சீனாவின் செயற்கை நுண்ணறிவு செயலியான டீப்சீக் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு தொடர்பான விதிகளை கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறியதைத் தொடர்ந்து அந்தச் செயலியைப் புதிதாகப் பதிவிறக்குவதை தென் கொரிய அரசின் தரவு பாதுகாப்பு ஆணையம் நிறுத்தி வைத்துள்ளது.
இதனை, தென் கொரிய அரசின் தரவுகள் பாதுகாப்பு ஆணையத்தின் துணைத் தலைவர் சோய் ஜாங்-ஹியூக் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் தென் கொரியாவின் சட்ட திட்டங்களுக்கேற்ப டீப்சீக் செயலியின் தனிப்பட்ட தரவுகள் செயல்பாட்டு நடைமுறைகள் முழுமையாக ஆராயப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
டீப்சீக் செயலியில் உள்நாட்டு தனியுரிமைச் சட்டங்களுக்கான பரிசீலனைகள் குறைவு என்பது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தென் கொரியாவின் தனியுரிமைச் சட்டங்களுடன் அந்தச் செயலியை இணைப்பதற்கு அதிக காலம் செலவாகும் என்றும் தென் கொரிய தரவுகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக டீப்சீக் செயலியை அரசு அலுவலகங்களில் பயன்படுத்த தென் கொரிய அரசு தடை விதித்துள்ளது.
மேலும், டீப்சீக் செயலியின் பயன்பாட்டினைத் தவிர்க்க அதன் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
இதன்படி, அந்தச் செயலியை ஏற்கனவே பயன்படுத்தும் பயனர்கள் இந்தத் தற்காலிகத் தடை தொடர்பான இறுதி முடிவுகள் எடுக்கப்படும் வரை எச்சரிக்கையுடன் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தனிப்பட்ட தகவல்களை டீப்சீக் செயலியில் உள்ளிடுவதைத் தவிர்க்கவும் வலியுறுத்தியுள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 20, 2025, 4:05 pm
யானைகள் மீது மோதித் தடம் புரண்ட ரயில்
February 20, 2025, 3:54 pm
ஆப்கன் அகதிகளை வெளியேற்ற பாகிஸ்தான் திட்டம்
February 20, 2025, 1:31 pm
நடுவானில் சிறிய ரக விமானங்கள் மோதல்: 2 பேர் உயிரிழப்பு
February 20, 2025, 11:45 am
ரகசிய கேமராவுக்குப் பயந்து படுக்கை மேல் கூடாரம் அமைத்த பெண்
February 20, 2025, 11:26 am
விளாடிமீர் செலென்ஸ்கி ஒரு சர்வாதிகாரி: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்க குற்றச்சாட்டு
February 20, 2025, 10:51 am
நோய்வாய்ப்பட்ட பாட்டியைக் காண பெண் பிள்ளைக்கு அனுமதி மறுப்பு: தாதியரை அறைந்த தந்தை
February 20, 2025, 10:09 am
பன்னீர் செல்வத்தின் தூக்கு தண்டனை கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது
February 19, 2025, 11:15 am
Gerber Soothe 'n' Chew Teething Sticks - திரும்பப் பெற உத்தரவு
February 18, 2025, 4:06 pm
சீனாவில் முதியவர்களை மகிழ்விக்க பிரத்யேக ரயில் அறிமுகம்
February 18, 2025, 2:46 pm