நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கனடாவில் ஓடுபாதையில் கவிழ்ந்த விமானம்: 19 பேர் காயம்

டொரன்டோ:

 அமெரிக்காவில் இருந்து வந்த பயணிகள் விமானம், ஓடுபாதையில் இறங்கும்போது விபத்துக்குள்ளாகி தலைகீழாக கவிழ்ந்தது. 

இதில் 19 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் இருந்து கனடாவின் டொரன்டோ நகருக்கு 76 பயணிகள், 4 ஊழியர்களுடன் டெல்டா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் வந்தது. 

டொரன்டோ நகரில் தரையிறங்கும்போது, திடீரென விபத்துக்குள்ளாகி ஓடுபாதையில் தலைகீழாக கவிழ்ந்து தீப்பிடித்தது.

இதனையடுத்து அதிர்ச்சியடைந்த பயணிகள், அலறியடித்துக் கொண்டு, உள்ளே இருந்து குதித்து வெளியேறினர். 

விபத்திற்கான காரணம் தெரியவில்லை. உடனடியாக போலீசார், மீட்புப் பணியில் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் 19 பேர் காயமடைந்துள்ளனர்.


அதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்து காரணமாக, அந்த விமான நிலையத்தில் பணிகள் பாதிக்கப்பட்டன. 

விபத்து தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset