நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நோய்வாய்ப்பட்ட பாட்டியைக் காண பெண் பிள்ளைக்கு அனுமதி மறுப்பு: தாதியரை அறைந்த தந்தை 

பெங்கொக்: 

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது பாட்டியைக் காண அங்கு வந்திருந்த பெண் பிள்ளைக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அங்குள்ள தாதியரை அறைந்தார் அந்த பிள்ளையின் தந்தை 

இந்த சம்பவம் தாய்லாந்து நாட்டின் ரயோங் வட்டாரத்தில் நிகழ்ந்தது

பாதிக்கப்பட்ட தாதியரை அறைவதற்கு முன் சம்பந்தப்பட்ட ஆடவர் அங்குள்ள தாதியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் 

வைரஸ் காய்ச்சலால் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள தனது பாட்டியைக் காண பெண் பிள்ளைக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவர் அறைந்ததாக கூறப்படுகிறது 

இந்நிலையில் தாதியரை அறைந்த ஆடவருக்கு எதிராக இங்குள்ள முவாங் ரயோங் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

சந்தேக நபர் காவல்நிலையத்திற்கு வந்து விளக்கம் அளித்து தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக முவாங் ரயோங் காவல்துறை தரப்பு தெரிவித்தது. அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை குறிப்பிட்டது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset