நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

Gerber Soothe 'n' Chew Teething Sticks - திரும்பப் பெற உத்தரவு

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் Gerber Soothe 'n' Chew Teething Sticks எனும் குழந்தைகளுக்கான தின்பண்டத்தை மீட்டுக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

அது குழந்தைகளுக்கும் சிறு பிள்ளைகளுக்கும் மூச்சுத் திணறலை ஏற்படுத்தக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டது.

6 மாதக் குழந்தைகள் முதல் அவற்றைப் பயன்படுத்தலாம். பல் வளரும்போது அதனால் ஏற்படும் வலியிலிருந்து தின்பண்டம் நிவாரணம் அளிக்கிறது.

தின்பண்டங்களை இறக்குமதி செய்யும் Redmart நிறுவனம், அமெரிக்காவில் அதன் உற்பத்தியாளர் அதனைத் திரும்பப் பெறுவதைப் பற்றித் தகவல் தந்ததாகச் சிங்கப்பூர் உணவு அமைப்பு  தெரிவித்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக Redmart நிறுவனத்திடம் தின்பண்டங்களை மீட்டுக்கொள்ளச் சொன்னதாகச் சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறியது.

அமெரிக்காவில் Gerber Soothe 'n' Chew Teething Sticks தின்பண்டத்தினால் குறைந்தது ஒரு குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகம் தெரிவித்தது.

Nestle USA நிறுவனம் அதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset