நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ரகசிய கேமராவுக்குப் பயந்து படுக்கை மேல் கூடாரம் அமைத்த பெண்

பெய்ஜிங்:

சீனாவிலுள்ள தங்கும் விடுதிகளில் கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் பெண் ஒருவர் புதிய வழி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்.

படுக்கையை மறைக்க அதன் மேல் அவர் கூடாரத்தை அமைத்தார்.

அதை எப்படி அமைப்பது என்பதை அவர் காணொலியாகச் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.

அவருடைய அந்தப் புத்தாக்க அணுகுமுறை இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தங்கும் விடுதிகளில் பாதுகாப்புக் குறித்து அவர்கள் வினவினர்.

அங்குத் தங்கும் நபர்கள்கேமரா மூலம் கண்காணிக்கப்படுவதாகக் கூறும் செய்திகளைப் படித்திருக்கிறேன். 

அது வருத்தத்தை அளிக்கிறது என்று அந்தப் பெண் பகிர்ந்துகொண்டார்.

முதலில் கூடாரத்தை வாங்கி படுக்கை மேல் வைப்பது அவரது திட்டம்.

ஆனால் பயணம் செய்யும்போது அது சிரமம் என்று அவர் உணர்ந்தார்.

அதற்குப் பதிலாக பெரிய துணியையும் நீண்ட கயிற்றையும் வைத்து கூடாரத்தை அமைத்தார்.

பெண்களைப் பாதுகாக்க இது நல்ல யோசனை என்றனர் இணையவாசிகள்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset