நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பன்நூலாசிரியர் கலீல் அவ்ன் மௌலானாவின் நூல்கள் சிங்கப்பூரில் அறிமுகம்

சிங்கப்பூர்:

தலைச்சிறந்த ஆய்வாளரும், மூத்த தமிழறிஞருமான அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் மௌலானாவின் நூல்கள் அறிமுக விழா 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை காலை சிங்கப்பூரிலுள்ள மஸ்ஜித் சுல்தான் பன்நோக்கு மண்டபத்தில் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் அலி மௌலானா அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

சிங்கப்பூர் நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் அ.முஹம்மது இர்ஷாத் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சிங்கப்பூர் கிளைத் தலைவர் முனைவர் மு.அ. காதர், மூத்த ஊடகவியலாளர் முஹம்மது அலி, சிராங்கூன் டைம்ஸ் இதழின் முதன்மை ஆசிரியரும், எழுத்தாளருமான ஷாநவாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

May be an image of 2 people, people studying and crowd

ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் மௌலானா அவர்கள் எழுதிய நாயகர் பன்னிரு பாடல், ஈழவள நாட்டிற் பயிர்பெருக்க வாரீர், குறிஞ்சிச் சுவை, பாலைவனம், சிறார் பாடல்கள், பாத்திமா நாயகியார் மாலை, அப்பாஸியாக்கள், உமர் ரலி புராணம், அற்புத அகில நாதர், குத்புகள் திலகம் யாஸின் ரலி வரலாறு, மஹானந்தலங்கார மாலை உள்ளிட்ட 11 நூல்கள் இந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

நூல்கள் குறித்த ஆய்வுரையை கவிமாலை காப்பாளர் புதுமைத்தேனீ மா. அன்பழகன், ஜாமியா சிங்கப்பூர் அற நிறுவன சமய நல்லிணக்கப் பணி மூத்த இயக்குநர் முனைவர் எச். முஹம்மது சலீம் ஆகியோர் வழங்கினர்.

கலீபா வா.ச நிஜாமுதீன் உள்ளிட்ட ஏகத்துவ மெய்ஞான சபை உறுப்பினர்கள், சமூகத் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், பல்வேறு சமூக நல  சேவையாளர்கள் பலர் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியை அப்துல் சுபஹான் வழிநடத்தினார்.

May be an image of 11 people

நூலாசிரியர் கலீல் அவ்ன் மௌலானா அவர்கள் எழுதிய “ஈழவள நாட்டிற் பயிர்பெருக்க வாரீர்” எனும் நூல் 1967ஆம் ஆண்டு “இலங்கை சாகித்திய மண்டல விருது” பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் நாட்டின் மூத்த ஆசியான் கவிஞர் க து மு இக்பால், இந்திய முஸ்லிம் பேரவைத் தலைவர் முஹம்மது பிலால், புதிய நிலா ஜஹாங்கீர், முனைவர் சலீம், பென்கூலன் பள்ளிவாசல் தலைவர் ஹாஜி முஹம்மது ரஃபீக், முஸ்லிம் லீக் சிங்கப்பூர் பொதுச் செயலாளர் முஹம்மது கவுஸ் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.      

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset