நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எப்ஏஎம் உதவித் தலைவராக சேரன், ஆட்சிக் குழு உறுப்பினராக சுகுமாரன் வெற்றி: மீண்டும் துணைத் தலைவரானார் டத்தோ சிவசுந்தரம்

சுபாங்:

எப்ஏஎம் துணைத் தலைவராக டத்தோ எஸ். சிவசுந்தரம் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

எப்ஏஎம் எனப்படும் மலேசிய கால்பந்து சங்கத்தின் 61ஆவது ஆண்டுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தை தொடர்ந்து புதிய நிர்வாகத்திற்கான தேர்தலும் நடைபெற்றது.

இதில் மலேசிய கால்பந்து சங்கத்தின் தலைவராக டத்தோ முகமத் ஜொஹாரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

டான்ஶ்ரீ ஹமிடின் ஹமின் போட்டியில் இருந்து விலகியதால் அவர் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

டத்தோ முஹம்மத் யூசுப் மஹாடி, டத்தோ சிவசுந்தரம் ஆகியோர் சங்கத்தின் துணைத் தலைவர்களாக தேர்வு பெற்றனர்.

சங்கத்தின் உதவித் தலைவர்களாக டத்தோஶ்ரீ ரோஸ்மாடி இஸ்மாயில், டத்தோ அஸஹார் ஜமாலுடின், டத்தோ டோலா சாலே ஆகியோர் வெற்றி பெற்றனர்.

ஆட்சிக் குழு உறுப்பினர்களாக டத்தோ சுகுமாறன், டத்தோ ஜைனால் அபிடின், ஹிசாமுடின் அப்துல் கரிம், தாங் சீ ஹோங் உட்பட பலர் வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset