நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீலாய் சுற்றுவட்டாரத்தில் 500 மாணவர்களுக்கு பள்ளி உபகரணப் பொருட்கள் வழங்கப்பட்டது: டத்தோ சரவணக்குமார்

நீலாய்:

நீலாய் சுற்றுவட்டாரத்தில் 500 மாணவர்களுக்கு பள்ளி உபகரணப் பொருட்கள் வழங்கப்பட்டதாக சிரம்பான் பெர்சத்து சயாப் பிரிவின் தலைவர் டத்தோ சரவணக்குமார் கூறினார்.

2025ஆம் ஆண்டுக்கான பள்ளித் தவணை வரும் திங்கட்கிழமை தொடங்கவுள்ளது.

கல்வி கற்கும் மாணவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு பெற்றோர்களும் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பள்ளி உபகரண பொருட்கள் இன்று வழங்கப்பட்டது.

அதே வேளையில் பெற்றோர்களின் சுமையை குறைக்கும் நோக்கிலும் இந்த உதவிகள் வழங்கப்பட்டது.

நீலாய் சுற்றுவட்டாரத்தில் 500 மாணவர்களுக்கு இப்பொருட்கள் வழங்கப்பட்டது.

மாணவர்கள் தங்களின் கல்வியில் முழு கவனத்தை செலுத்த வேண்டும்.

இதுவே எனது வலியுறுத்தலாகும் என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset