நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரோன் 95 பெட்ரோல் மோசடிகளை முறியடிப்பதில் கேபிடிஎன் தீவிரமாகச் செயல்பட வேண்டும்:ஓன் ஹஃபிஸ்

ஜொகூர் பாரு: 

வெளிநாட்டு வாகனங்கள் மானிய விலையில் ரோன் 95 பெட்ரோல் வாங்கும் மோசடிகளை முறியடிப்பதில் ஜொகூர் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவீன அமைச்சகம், கேபிடிஎன் தீவீரம் காட்ட வேண்டும் என்று அம்மாநில மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபீஸ் காசி கூறினார்.

இது போன்ற மோசடி நடவடிக்கையால் ஜொகூர் மக்களுக்கான பெட்ரோல் பயன்பாடு பாதிக்கின்றது. 

ஜொகூர் கேபிடிஎன் இயக்குனர் லிலிஸ் சஸ்லிண்டா போர்னோமோவுடன் இது குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் கூறினார். 

இந்த மோசடி நடவடிக்கைகளை விரைவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்று ஓன் ஹஃபீஸ் கேட்டுக் கொண்டார். 

ஜொகூர் மக்களின் உரிமைகள், நலன் எப்போதும் பாதுகாக்கப்படுவதை மாநில அரசு உறுதிப்படுத்தும். 

கேபிடிஎன் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, வழக்கமான கண்காணிப்பு மூலம் அமலாக்கத்தை அதிகரிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். 

வெளிநாட்டு பதிவு எண்களைக் கொண்ட வாகனங்களுக்கு மானிய விலையில் ரோன் 95 பெட்ரோலை விற்கும் சம்பவங்கள் மாநிலத்தில் தொடர்ந்து நடப்பது கண்டறியப்பட்டுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset