நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மார்ச் 1 முதல் பினாங்கில் தினமும் நெகிழி பயன்பாட்டிற்கு எதிராக விழிப்புணர்வு திட்டம் செயல்படும்: சுந்தரராஜூ

ஜார்ஜ் டவுன்:

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், நிலையான எதிர்காலத்தை அடையவும், பினாங்கு மாநிலம் மார்ச் 1-ஆம் தேதி முதல் தினமும் நெகிழி பயன்பாடு இல்லாத சூழலை உருவாக்கும் விழிப்புணர்வு திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளதாக அம்மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.சுந்தரராஜூ தெரிவித்தார். 

மாநிலம் முழுவதும் இலவசமாக பயன்படுத்தக்கூடிய நெகிழி பைகளை மீண்டும் தவிர்க்க வேண்டும். 

இந்தப் புதிய செயல்திட்டம் மார்ச் 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை 6 மாதங்கள் செயல்படுத்தப்படும் என்றார் அவர். 

இது வணிகங்களும் பொதுமக்களும் புதிய விதிமுறைகளுக்கு இணங்குவார்கள். 

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் இந்தச் செயல்திட்டம் முழுமையாகத் தொடங்கும். 

தொடக்கமாக, பினாங்கு பசுமை மன்றம் முதல் மூன்று மாதங்களில் மாநில குடியிருப்பாளர்களுக்கு 100,000 மறுசுழற்சி செய்யக்கூடிய பைகளை வழங்கும். அதன் பிறகு, பைகள் வாங்குபவர்களுக்கு விற்கப்படும் என்று அவர் கூறினார்.

2009 ஆம் ஆண்டு மாநில அரசால் 'இலவச பிளாஸ்டிக் பைகள் இல்லை' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் மூலம் பினாங்கு வணிகர்களுக்கு நெகிழி பைகளை இலவசமாக வழங்க வேண்டாம் என்று அறிவுறுத்திய முதல் மாநிலமாக மாறியது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset