நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காசாவிலிருந்து பாலஸ்தீனர்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுவதற்கு மலேசியாவும் எகிப்தும் இணைந்து எதிர்க்கிறது: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்: 

பாலஸ்தீனர்களைக் காசாவிலிருந்து வெளியேற்றும் எந்தவொரு முயற்சியையும் நிராகரிப்பதில் மலேசியாவும் எகிப்தும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். 

இதுபோன்ற நடவடிக்கைகள் ஒரு சுதந்திர பாலஸ்தீன அரசை நிறுவுவதற்கான முயற்சிகளை கடுமையாகப் பாதிக்கும் என்று அன்வார் குறிப்பிட்டார். 

எகிப்திய அதிபர் Abdel Fattah El-Sisi-யுடன் நேற்று நடந்த தொலைபேசி உரையாடலில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் இந்த நிலைப்பாட்டைத் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல், அவர்கள் சமீபத்திய மனிதாபிமான நிலைமை மற்றும் காசாவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் குறித்து விவாதித்தனர்.

பாலஸ்தீன மக்களுக்குக், குறிப்பாக மனிதாபிமான உதவி, மருத்துவ உதவி மற்றும் மறுகட்டமைப்பு ஆகியவற்றில் தொடர்ந்து உதவுவதற்கும், நீதிக்கான அவர்களின் போராட்டத்தை உறுதியாக ஆதரிப்பதற்கும் மலேசியாவின் உறுதிப்பாட்டைப் பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

பாலஸ்தீனத்திற்கான உதவி முயற்சிகளை மிகவும் திறம்படச் செய்வதில் உலகளாவிய ஒற்றுமை மிக முக்கியமானது என்று அன்வர் வலியுறுத்தினார்.

இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகளைப் பற்றி விவாதித்தனர், மேலும் பொருளாதாரம், முதலீடு, வர்த்தகம், கல்வி மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மலேசியா-எகிப்து ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset