நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர்- சிங்கப்பூர் பாலத்தில் இருவர் சண்டையிடும் காணொலி சமூக ஊடகத்தில் வைரல்

ஜொகூர் பாரு: 

ஜொகூர்- சிங்கப்பூர் பாலத்தில் இரு ஆடவர்கள் சண்டையில் ஈடுபட்ட கானொலி இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தக் காணொலி முகநூல் தளத்தில் பகிரப்பட்டது.

காணொலியில் 2 கருப்பு வாகனங்களில் சென்று கொண்டிருந்த ஓட்டுநர்கள் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதைக் காண முடிந்தது.

முதலில சாம்பல் நிற சட்டை அணிந்திருந்த ஓட்டுநர் தம் வாகனத்திலிருந்து இறங்கி மற்றுமொரு காரை நிறுத்த முற்பட்டார்.

ஆனால், காரின் ஓட்டுநர் நிற்காமல் சற்று தூரம் சென்று பின் நிறுத்தினார்.

காரிலிருந்து கருப்பு சட்டை அணிந்த ஆடவர் இறங்கி வந்தார்.

அவர் சாம்பல் நிற சட்டை அணிந்த ஓட்டுநரைக் கடுமையாக அடிக்கத் தொடங்கினார். பின் அவரது கழுத்தை நெரிப்பதும் காணொலியில் பதிவானது.

காணொலியின் இறுதியில் சம்பவத்தைக் கண்ட ஆடவர் இருவரையும் தடுக்க முயல்வதைக் காண முடிந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜொகூர் பாரு தென் மாவட்ட உதவி ஆணையர் ரவூப் சிலாமாட் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset