நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

Google நிறுவனம் மீது வழக்கு: மெக்சிகோ அதிபர் கிளவ்டியா தொடுக்கிறார் 

மெக்சிகோ சிட்டி:

மெக்சிகோ அதிபர் கிளவ்டியா ஷேன்பாம் (Claudia Sheinbaum) Google நிறுவனம் மீது வழக்குத் தொடுக்கப்போவதாகக் கூறியுள்ளார்.

அமெரிக்க பயனீட்டாளர்களுக்காகக் Google தளத்தில் மெக்சிகோ வளைகுடா என்ற பெயரை அமெரிக்க வளைகுடா என்று மாற்றியதற்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாக உத்தரவுக்கு இணங்க Google நிறுவனம் அந்த மாற்றத்தைச் செய்ததாகச் சொன்னது.

வளைகுடாவின் ஒரு பகுதி அமெரிக்காவுக்குச் சொந்தம்.

அந்தப் பகுதியை மட்டும்தான் டிரம்ப்பின் உத்தரவு அமெரிக்க வளைகுடா என்று குறிப்பிடுகிறதே தவிர ஒட்டுமொத்த வளைகுடாவையும் அல்ல என்றார் ஷேன்பாம்.

இருப்பினும், அமெரிக்காவுக்கு வெளியில் உள்ள இதர நாட்டுப் பயனீட்டாளர்கள் வளைகுடாவுக்கு முதலில் வைக்கப்பட்ட பெயரையும் மாற்றப்பட்ட பெயரையும் பார்க்கமுடியும் என்று Google சொன்னது.

ஆதாரம்: The Star

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset