நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சோஸ்மா சட்டத்தை மீளாய்வு செய்ய அரசு முடிவு: ஃபஹ்மி

கோலாலம்பூர்:

பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (Sosma) குறித்து மீளாய்வு செய்ய பிரதமர் அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார் என்று அரசு செய்தித் தொடர்பாளரும் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.

சோஸ்மா சட்டத்தின் சில அம்சங்களை மேம்படுத்த அரசு ஆராயும். 

உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுஷியான் இஸ்மாயில் விரைவில் நாடாளுமன்றத்தில் இந்த மீளாய்வுக்கான கூடுதல் தகவல்களை வழங்குவார் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

சோஸ்மா நீக்கப்படவேண்டும் என நாடாளுமன்ற முன்னாள்  உறுப்பினர்களான Ong Kian Ming, Khalid Samad, Kasthuri Patto, Noor Amin Ahmad, Maria Chin Abdullah ஆகியோர் கோரிக்கை வைத்திருந்தனர். 

குறிப்பாக இவர்கள் சோஸ்மா சட்டத்தை ரத்து செய்ய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

சோஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் மோசமான அனுபவங்களை எதிர்கொள்கிறார்கள். நீதிமன்ற விசாரணையில் தேவையற்ற தாமதங்கள் ஏற்படுகின்றன. எனவே, இந்த சட்டத்தின் அவசியத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

2012ல், நஜிப் ரசாக் தலைமையிலான அரசு, Internal Security Act (ISA) நீக்கப்பட்ட பிறகு, அதற்கு மாற்றாக சோஸ்மா சட்டத்தை அமல்படுத்தியது.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset