![image](https://imgs.nambikkai.com.my/8-d5b13.jpg)
செய்திகள் மலேசியா
இஸ்லாமியர்களுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் தவறல்ல: கைரி ஜமாலுடின்
பெட்டாலிங் ஜெயா:
பிற மதத்தினரின் விழாக்கள் மற்றும் இறுதி நிகழ்ச்சிகளில் முஸ்லிம்கள், பங்கேற்பது தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து ஏற்பட்ட சர்ச்சையில், சமய விவகாரங்கள் அமைச்சர் நயீம் மொக்தாரை ஆதரித்து, அம்னோ இளைஞரணி முன்னாள் தலைவர் கைரி ஜமாலுடின் கருத்து தெரிவித்தார்.
நயீம் தற்போது உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை புதுப்பிக்க முயன்றார். ஆனால் அவர் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளார். இதன் காரணமாக, அவர் ‘சூழ்நிலையின் பலியாடாக’ மாறிவிட்டார் என தலைவர் கைரி ஜமாலுடின் தமது Keluar Sekejap போட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய போது இவ்வாறு தெரிவித்தார்.
இந்த விவகாரம் தேவையில்லாமல் பெரிதாகி விட்டது. வழக்கம்போல், இருபுறமும் ஒருவருக்கொருவர் உணர்வுப்பூர்வமாக அணுகாமல் நடந்துகொண்டனர்,” என்றார். 2005இல் ஏற்கனவே விதிக்கப்பட்ட வழிகாட்டி நெறிமுறைதான் இது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
நான் நயீம் இருந்திருந்தால், ஏற்கனவே 2005 ஏப்ரல் 12ஆம் தேதி, தேசிய இஸ்லாமிய மத விவகார கவுன்சிலின் ஃபத்வா குழுவால் இத்தகைய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன என்பதைக் குறிப்பாகச் சொல்வேன்,” என்றார்.
சமீபத்தில், இஸ்லாமிய அபிவிருத்தி அமைப்பு (JAKIM), முஸ்லிம்கள், பிற மத விழாக்கள், இறுதி நிகழ்வுகள் மற்றும் பிற மத ஆலயங்களில் பங்கேற்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை இறுதியாக உருவாக்கி வருவதாக அமைச்சர் நயீம் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, “இந்த வழிகாட்டு நெறிமுறைகள் தேவையில்லை. இது மக்கள் மனதில் குழப்பம் உருவாக்கும்,” என்று தெரிவித்தார். இதன் பின்னர், இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பெரும் எதிர்ப்பை சந்தித்தன.
இந்த வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயமான சட்டங்களோ, அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வக் கொள்கையோ அல்ல. இவை வெறும் பரிந்துரைகள் மட்டுமே,” என்று கைரி விளக்கினார்.
மக்கள் எந்த நிகழ்வில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு வழிகாட்டுதல் தேவை. ஏனெனில், எல்லோருக்கும் எல்லாவற்றையும் பற்றிய அறிவு இருக்காது என்றார்.
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
February 15, 2025, 9:11 pm
மன்னித்து விடுங்கள்; இந்த சோளம் இந்தியருக்கு விற்பனைக்கு இல்லை: வைரலாகும் வீடியோ பதிவு
February 15, 2025, 9:10 pm
நீலாய் சுற்றுவட்டாரத்தில் 500 மாணவர்களுக்கு பள்ளி உபகரணப் பொருட்கள் வழங்கப்பட்டது: டத்தோ சரவணக்குமார்
February 15, 2025, 9:06 pm
மக்கள் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 245 தோட்ட பாட்டாளிகளுக்கு புதிய வீடுகள் கட்டப்படும்: பிரதமர் அன்வார்
February 15, 2025, 7:23 pm
ஆங்கிலப் போட்டிக்காக அமெரிக்க செல்ல மக்களின் உதவியை நாடுகிறார் மாணவி ஷாஷினி
February 15, 2025, 3:15 pm