நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளித் திறப்பு தொடர்பான வழிகாட்டி நெறிமுறையை மலேசியக் கல்வி அமைச்சு தயாரிக்கும் 

புத்ராஜெயா: 

புதிய கல்வி தவணையைத் தொடங்கவும் அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளைத் தயார் செய்யவும் மலேசியக் கல்வி அமைச்சு தயார் நிலையில் உள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக மாநில கல்வி இலாகா, மாவட்ட கல்வி இலாகா மற்றும் பள்ளிகளுக்கும் விளக்கவுரைகள் வழங்கப்படும் என்று கல்வித்துறையின் துணை இயக்குநர் டாக்டர் முஹம்மத் அஸாம் அஹ்மத் கூறினார். 

இந்த வழிகாட்டி நெறிமுறையானது பள்ளிகள் திறப்பு, அதன் செயலாக்கம் குறித்து தெளிவாக முதன்மை வழிகாட்டியாக இது இருக்கும் என்று அவர் தெளிவுப்படுத்தினார். 

ஆக, கல்வி அமைச்சு பள்ளி திறப்பு குறித்து தயாராக உள்ளது. முன்னதாக, எஸ்.பி.எம் தேர்வுக்கு 8 ஆயிரம் மாணவர்கள் தேர்வுக்கு அமரவில்லை எனும் கேள்விக்கு விளக்கம் அளிக்கையில் கூடுதலாக இந்த தகவலையும் வெளியிட்டார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset