நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் எல்லைகளைச் சென்ற ஆண்டு மட்டும் 230 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் கடந்துள்ளனர் 

சிங்கப்பூர்:

சிங்கப்பூர் எல்லைகளைச் சென்ற ஆண்டு 230 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் கடந்துள்ளனர்.

கோவிட்-19 நோய்ப்பரவலுக்கு முந்திய நிலையைவிட அது 6 விழுக்காடு அதிகரித்துள்ளது.

2023ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு பயணிகளின் எண்ணிக்கை 20 விழுக்காடு உயர்ந்தது.

சுற்றுப்பயணிகளின் வருகைக்கு நவீனத் தொழில்நுட்பம் முக்கியக் காரணம் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் கூறியது.

சிங்கப்பூரர்கள் கடப்பிதழ் இல்லாமல் சாவடியைக் கடக்கலாம். வெளிநாட்டவர் தானியக்க இயந்திரத்தைப் பயன்படுத்தலாம் போன்ற வசதிகள் சிங்கப்பூர் விமான நிலையத்திலும் உட்லண்ட்ஸ் - ஜோகூர் எல்லையிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

அனைத்துப் பயணிகளும் தானியக்க இயந்திரத்தைப் பயன்படுத்தி எல்லையைக் கடக்க உதவும் முதல் உலக நாடு என்ற பெருமையை நோக்கிச் சிங்கப்பூர் அடியெடுத்து வைப்பதாக ஆணையம் சொன்னது.

கடந்த மாதக் கடைசிவரை சுமார் 47 மில்லியன் பேர் கடப்பிதழின்றிச் சிங்கப்பூர் குடிநுழைவுச் சோதனைச் சாவடியைக் கடந்திருக்கின்றனர் என்று  சோதனைச்சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

- ரோஷித் அலி .

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset