
செய்திகள் உலகம்
2-ஆம் உலகப் போரின்போது புதைத்து வைக்கப்பட்ட வெடிகுண்டுகள் இங்கிலாந்து பூங்காவில் கண்டெடுக்கப்பட்டன
லண்டன்:
இங்கிலாந்தின் நார்த்தம்பர்லாண்ட் நகரில் உள்ள ஸ்காட்ஸ் சிறுவர் பூங்காவை விரிவாக்கம் செய்யும் பணியின் போது அப்போது அங்கு ஒரு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், இது குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தச் சோதனையில் மேலும் பல வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
அவை 2-ஆம் உலகப்போரின்போது பதுக்கி வைக்கப்பட்ட குண்டுகள் என்பது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து பூங்காவின் மற்ற இடங்களையும் தோண்டி பார்க்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதுவரை அங்கு 170-க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அந்த குண்டுகள் ஒவ்வொன்றும் சுமார் 4.5 கிலோ எடை கொண்டவை என கூறப்படுகிறது.
அந்த குண்டுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, அவற்றை செயலிழக்க செய்யும் பணியில் வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
February 19, 2025, 11:15 am
Gerber Soothe 'n' Chew Teething Sticks - திரும்பப் பெற உத்தரவு
February 18, 2025, 4:06 pm
சீனாவில் முதியவர்களை மகிழ்விக்க பிரத்யேக ரயில் அறிமுகம்
February 18, 2025, 2:46 pm
கனடாவில் ஓடுபாதையில் கவிழ்ந்த விமானம்: 19 பேர் காயம்
February 17, 2025, 2:11 pm
சீனாவின் டீப்சீக் செயலியின் பயன்பாட்டிற்கு தென் கொரிய அரசு தடை
February 17, 2025, 12:59 pm
பன்நூலாசிரியர் கலீல் அவ்ன் மௌலானாவின் நூல்கள் சிங்கப்பூரில் அறிமுகம்
February 17, 2025, 12:32 pm
இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கிவந்த 21 மில்லியன் டாலர் நிதி உதவி நிறுத்தம்: எலான் மஸ்க் அதிரடி
February 16, 2025, 7:00 pm
ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டவர் வீடு வாங்குவதற்குத் தடை: நிதியமைச்சர் ஜிம் சாம்மர்ஸ்
February 16, 2025, 6:56 pm
சிங்கப்பூரில் திருமணத்தில் உறுதியான நம்பிக்கையுடன் பொன்விழா கொண்டாடும் தம்பதிகளை அங்கீகரிக்கும் நிகழ்ச்சி
February 16, 2025, 10:46 am
நடுவானில் பயணி மரணம்: பிரித்தானியாவிற்கு புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கம்
February 16, 2025, 1:11 am