நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமரின் பத்துமலை வருகை இந்திய சமூகத்தின் மீதான  அவரது அர்ப்பணிப்பு, அக்கறைக்கு ஒரு சான்றாகும்: டத்தோஸ்ரீ ரமணன்

பத்துமலை:

பிரதமரின் பத்துமலை வருகை இந்திய சமூகத்தின் மீதான அவரது அர்ப்பணிப்பு, அக்கறைக்கு ஒரு சான்றாகும்.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை வலியுறுத்தினார்.

மலேசியாவில் வாழும் இந்து மக்கள் வரும் செவ்வாய்க்கிழமை தைப்பூச விழாவை கொண்டாடவுள்ளனர்.

நாட்டில் தைப்பூச கொண்டாட்டத்திற்கு தாய் கோவிலாக பத்துமலை விளங்குகிறது.

இதன் அடிப்படையில் இந்த தைப்பூச விழா ஏற்பாடுகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இன்று பத்துமலைக்கு வந்திருந்தார். அவருடன் நானும் சென்றிருந்தேன்.

ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ நடராஜா பிரதமரை வரவேற்றார்.

பத்துமலைக்கு பிரதமரின் வருகை இந்த நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் மீதான அவரது அர்ப்பணிப்பு, அக்கறைக்கு ஒரு சான்றாகும். 

இதுதான் நம் நாட்டின் மகத்துவம். ஒருவருக்கொருவர் ஒற்றுமைக்கான வலுவான அடித்தளம். 

மேலும் சுற்றுலா அம்சங்கள் உட்பட பத்துமலை மேம்பாடு குறித்து ஆலய நிர்வாகத்தின் கோரிக்கைகளை பிரதமர் கவனமாகக் கேட்டார் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம், இந்திய சமூகத்தின் மேம்பாட்டில் தொடர்ந்து தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

மேலும் இந்திய சமூகத்தின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான மூலோபாய நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்

இதனால் தேசிய வளர்ச்சியின் முக்கிய நீரோட்டத்தில் சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்தினரும் உள்ளடக்கிய பங்களிப்பை உறுதி செய்யும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset