நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலையில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கான அனுமதிக்கு உத்தரவிட்ட பிரதமருக்கு நன்றி: டான்ஸ்ரீ நடராஜா

பத்துமலை:

பத்துமலையில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு திட்டங்களுக்கான அனுமதிக்கு உடனடியாக உத்தரவிட்ட பிரதமருக்கு நன்றி.

ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா இதனை கூறினார்.

பத்துமலை தைப்பூச விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமருக்கு தேவஸ்தானம் அழைப்பு கொடுத்திருந்தது.

ஆனால், தைப்பூச தினத்தன்று அவர் வர முடியாததால் அவர் இன்று பத்துமலைக்கு சிறப்பு வருகை புரிந்தார்.

பத்துமலையில் நடைபெற்று வரும் தைப்பூச ஏற்பாடுகளையும் அவர் பார்வையிட்டார்.

அதே வேளையில் பத்துமலையில் கட்டப்படவிருக்கும் பிரமாண்டமான பல்நோக்கு மண்டபம் குறித்தும் பிரதமரிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. அந்த இடத்தை நேரில் பிரதமர் பார்வையிட்டார்.

மேலும் இந்த திட்டங்களுக்கு அனுமதி கிடைப்பதற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்தும் பிரதமரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது.

உடனே இந்த திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி தர வேண்டும் என மாநில மந்திரி புசாருக்கு உடனடியாக உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை வழங்கிய பிரதமருக்கு எனது மனப்பூர்வமாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் வரும் தைப்பூச தினத்தன்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி பத்துமலைக்கு வருகிறார்.

அந்த வருகையின் போது அவர் மகிழ்ச்சியான செய்தியை அறிவிப்பார் என தேவஸ்தானம் நம்புகிறது என்று டான்ஸ்ரீ நடராஜா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset