நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இளைஞர்களிடையே இந்து சமய விழிப்புணர்வை ஏற்படுத்த சமய பயிற்சிகள் அவசியமானதாகும்: டத்தோ சிவக்குமார்

அம்பாங்:

இளைஞர்களிடையே இந்து சமய விழிப்புணர்வை ஏற்படுத்த சமய பயிற்சிகள் அவசியமானதாக விளங்குகிறது.

மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.

மலேசிய ஶ்ரீ ஆதிசங்கரர் திருமடத்தினர் இந்து சமய பயிற்சிகளை தொடர்ச்சியாக் நடத்தி வருகின்றனர்.

இம்முறை நடத்தப்பட்ட பயிற்சியில் 120 மாணவர்கள் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட 4 நாட்களுக்கு இப்பயிற்சி நடைபெற்றது.

இவ்வேளையில் இப்பயிற்சியை வெற்றிகரமாக நடத்தி வரும் திரும்டத்தின் ஸ்தாபர் சுவாமி மகேந்திர குருக்களுக்கு எனது பாராட்டுகள்.

காரணம் இளைஞர்களுக்கு சமய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு இதுபோன்ற பயிற்சிகள் அவசியமானதாக உள்ளது.

ஆகையால் இப்பயிற்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும்.

இப்பயிற்சிகளுக்கு மஹிமா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset