நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலை தைப்பூச விழாவை முன்னிட்டு இலவச KTM ரயில், பேருந்து சேவைகள் பக்தர்களுக்கு பெரும் பயனாக இருக்கும்: குணராஜ் 

கிள்ளான்:

பத்துமலை தைப்பூச விழாவை முன்னிட்டு இலவச கேடிஎம் ரயில், பேருந்து சேவைகள் பக்தர்களுக்கு பெரும் பயனாக இருக்கும்.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் இதனை கூறினார்.

பத்துமலை தைப்பூசத்தை முன்னிட்டு பிப்ரவரி 10, 11ஆம் தேதிகளில் கிள்ளான் பள்ளத்தாக்கிற்கு இலவச ரயில் சேவையை வழங்கியதற்காக  போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், கேடிஎம்பிக்கு தைப்பூசப் பணிக் குழுவின் சார்பாக தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் பத்துமலைக்கு செல்லும் பக்தர்கலின் யணத்தை எளிதாக்க இந்த முயற்சி ஒரு முக்கியமான படியாகும். 

இது தைப்பூசத்திற்காக திரளாக கூடியுள்ள பக்தர்கள் பாதுகாப்பாகவும் சுமூகமாகவும் பயணிக்க உதவும். 

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளதை கருத்தில் கொண்டு, இலவச கேடிஎம் ரயில் சேவையை முழுமையாக பயன்படுத்துமாறு நாங்கள் அனைவரையும் உற்சாகமாக ஊக்குவிக்கிறோம்.

இது போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு மட்டுமல்லாமல், அனைவருக்கும் வசதியான பயண அனுபவத்தையும் வழங்கும். 

பொது போக்குவரத்தை பயன்படுத்துவது பார்க்கிங் சிக்கல்களை குறைக்கும்.

போக்குவரத்து நெரிசலால் நேரம் வீணாகாது.

மேலும் பக்தர்கள் தங்கள் ஆன்மீகச் செயல்பாடுகளில் முழுமையாக கவனம் செலுத்தும் வாய்ப்பை வழங்கும் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset