நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலை தைப்பூச விழாவின் போது ஆற்றங்கரையில் சுத்தத்தை பாதுகாப்பது பக்தர்களின் கடமையாகும்: டான்ஸ்ரீ நடராஜா

கோலாலம்பூர்:

பத்துமலை தைப்பூச விழாவின் போது ஆற்றங்கரையில் சுத்தத்தை பாதுகாப்பது பக்தர்களின் கடமையாகும்.

ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா இதனை கூறினார்.

தைப்பூச விழா வரும் பிப்ரவரி 11ஆம் தேதி கொண்டாடப்பட்டாலும் பத்துமலையில் பக்தர்கள் முன்கூட்டியே நேர்த்திக் கடனை பூர்த்தி செய்து வருகின்றனர்.

இதனால் பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக தேவஸ்தானம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

குறிப்பாக ஆற்றங்கரையில் சுத்தம் செய்யப்பட்டது. அதன் பின் ஆற்றங்கரையில் 20 அடி உயரத்தில் வேல் வைக்கப்பட்டது.

இன்று பத்துமலை ஆற்றங்கரை வளாகத்தில் தார் சாலை போடப்பட்டது.

ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தை சேர்ந்த பிரபல குத்தகையாளர் விவேக் தலைமையில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

தற்போது ஆற்றங்கரை மிகவும் சுத்தமாகவும் பக்தர்களுக்காகவும் தயார் நிலையில் உள்ளது.

இனி ஆற்றங்கரையை சுத்தமாக பாதுகாத்துக் கொள்வது பக்தர்களின் பொறுப்பாகும்.

குறிப்பாக குப்பைகளை குப்பை தொட்டியில் போடுங்கள். இது தான் முக்கியம் என்று டான்ஸ்ரீ நடராஜா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset