நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய இளம் மந்திரிவாதி கைது: போலிஸ்

கெமாமான்:

சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய இளம் மந்திரிவாதியை போலிசார் கைது செய்துள்ளனர்.

திரெங்கானு மாநில போலிஸ்  தலைவர் டத்தோ முகமட் கைரி கைருடின் இதனை தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 31 ஆம் தேதி கெமாமான் மாவட்டத்தில் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக  சம்பந்தப்பட்ட ஆடவர் மீது புகார் செய்யப்பட்டது.

அதிகாலை 1 மணியளவில் 20 வயது சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு ஒரு மாந்திரீக சிகிச்சைக்காக  வந்துள்ளார்.

அப்போது 11 வயது பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

41 வயதான பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பிப்ரவரி 1ஆம் தேதி  போலீசில் புகார் அளித்தனர்.

திருமணமாகாத சந்தேக நபர் விசாரணைக்கு உதவுவதற்காக அதே நாளில் இரவு 10.20 மணிக்கு கெர்த்தேவில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.

ஏற்கெனவே பாலியல் பலாத்காரம் தொடர்பான முந்தைய குற்றப் பதிவுகளைக் கொண்ட சந்தேக நபர் தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset