நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜி.எஸ்.டி வரியை மீண்டும் அமல்படுத்துங்கள்: பிரதமர் அன்வாருக்கு அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் அக்மால் சலே யோசனை 

ஷாஆலாம்: 

நாட்டின் வருவாயை மீண்டும் கொண்டு வருவதற்கு அரசாங்கம் மீண்டும் பொருள், சேவை வரியான ஜிஎஸ்டியை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று பிரதமர் அன்வாருக்கு அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் அக்மால் சலே யோசனை வழங்கினார் 

மின்சார கட்டணம் உயர்வு காணும் என்று பிரதமர் கூறிய நிலையில் அது எப்படி பார்த்தாலும் நாட்டு மக்களையும் பாதிக்க செய்யும் என்று அவர் கூறினார் 

இதனால் நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு அரசாங்கம் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுகொள்வதாக அவர் சொன்னார். 

நடப்பு மடானி அரசாங்கம் மீண்டும் ஜிஎஸ்டி வரி திட்டத்தைக் கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும். ஜிஎஸ்டி என்ற பெயர் வேண்டாம் என்றால் வேறு ஒரு பெயரில் அரசாங்கம் இதனை அமல்படுத்தலாம் என்று அக்மால் சலே சொன்னார் 

மலேசியாவில் தற்போது எஸ்.எஸ்.டி வரி திட்டம் அமலில் உள்ளது குறிப்பிடத்தகக்து

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset