நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செந்தூல் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்: விமரிசையாக நடைபெற்றது

கோலாலம்பூர்:

நூறு ஆண்டுகளுக்கு மேல் வரலாற்று சிறப்புமிக்க செந்தூல் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று விமரிசையாக நடைபெற்றது.

தமிழ் நாடு பிள்ளையார் பட்டியைச் சேர்ந்த சிவஸ்ரீ பிச்சை குருக்கள் தலைமையில் 20க்கும்  மேற்பட்ட இந்த மகா கும்பாபிஷேகத்தை விமரிசையாக நடத்தி வைத்தனர்

கடந்த  1893ஆம் ஆண்டு  இந்த ஆலயத்தை நகரத்தார்  கட்டி  கடந்த 1902ஆம் ஆண்டு முதல் கும்பாபிஷேகம் செய்தார்கள். 

இது தான் ஆலயத்தின் முதல் கும்பாபிஷேக விழாவாகும்.

அதனைத் தொடர்ந்து இன்று ஏழாவது மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் இக்கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர்.

ஆலய காரியக்காரர் பி.எல்.சிதம்பரம் செட்டியார், தலைவர்  எஸ்.ஓ.கே.சிதம்பரம் செட்டியார், ஆலயச் செயலாளர்,  பொருளாளர் எம். மெய்யப்பன் செட்டியார், நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இந்த மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

லோட்டஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம், மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ முருகையா, டத்தோ ஆர். இராமநாதன், கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை  ஸ்ரீ சுப்பிரமணியர் பரிபாலன சபா தலைவர் டத்தோ சுரேஷ்குமார், குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ் உட்பட பலர் இந்த விழாவில் கலந்து சிறப்பித்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset