நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஹெலிகாப்டருடன் மோதி ஆற்றில் விழுந்தது

வாஷிங்டன்:

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானமொன்று ஹெலிகாப்டருடன் மோதி விபத்துக்குள்ளானது.

விமானம் வாஷிங்டன் டிசியின் ரோனல்ட் ரேகன் (Ronald Reagan) தேசிய விமான நிலையத்தை நெருங்கும்போது விபத்து நேர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Potomac ஆற்றில் விமானம் விழுந்தது. தேடல், மீட்புப் படகுகள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

விமானம் கன்சஸ் (Kansas) மாநிலத்தின் விசித்தா (Wichita) நகரிலிருந்து வந்துகொண்டிருந்தது.

ரோனல்ட் ரேகன் (Ronald Reagan) தேசிய விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதும் தரையிறங்குவதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஆதாரம்: BBC

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset