நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

பணநாயகத்தை வீழ்த்தி, ஜனநாயகத்தை மலரச் செய்யுங்கள்: சீமான் அறைகூவல் 

ஈரோடு: 

பணநாயகத்தை வீழ்த்தி, ஜனநாயகத்தை மலரச் செய்ய இந்த இடைத்தேர்தலை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள், என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து, காளைமாடு சிலை அருகே நேற்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: 

தமிழகத்தில் தனித்து நின்று துணிந்து போட்டியிடும் இயக்கம் நாம் தமிழர் கட்சி மட்டுமே. தர்மம் வெல்லும் என்பது உண்மையானால் ஒரு நாள் நாங்கள் வெல்வோம். நாம் தமிழர் வேட்பாளரை வெற்றி பெறச்செய்தால், அவர் உங்களின் குரலாக சட்டப்பேரவையில் ஒலிப்பார்.

இதுவரை யார், யாரையோ நம்பினீர்கள். இந்த ஒரு முறை நாம் தமிழரை நம்பி வாக்களியுங்கள். இந்த வெற்றியின் மூலம் நீங்கள் படைக்கும் வரலாற்றை வருங்காலம் பேசும். 

பணநாயகத்தை வீழ்த்தி, ஜனநாயகத்தை மலரச் செய்ய இந்த இடைத்தேர்தலை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். பணத்தை வைத்து தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற நிலையை ஏற்படுத்துங்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நல்ல மாற்றத்தை, மாற்று அரசியலுக்கு வாய்ப்பு கொடுங்கள் இவ்வாறு அவர் பேசினார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset