நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சவுதி  நினைத்தால் ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த முடியும்: டொனால்ட் ட்ரம்ப்

புதுடெல்லி: 

சவுதி அரேபியாவின் ஒரே ஒரு நடவடிக்கை ரஷ்யா-உக்ரைன் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் 47-வது அதிபராக அண்மையில் பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், பல்வேறு அதிரடி முடிவுகளை ஒருசேர எடுத்து வருகிறார். குறிப்பாக, உக்ரைன் போர் விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மன்றத்தில் வீடியோ கால் மூலம் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “சவுதி அரேபியா மற்றும் பிற பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு (OPEC) நாடுகளுக்கு, எண்ணெய் விலைகளைக் குறைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். வெளிப்படையாக சொல்ல வேண்டுமேயானால், தேர்தலுக்கு முன்பு அவர்கள் அதைச் செய்யாதது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் விலையை குறைப்பதில் நாட்டம் செலுத்தவில்லை. இதுவும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. விலை குறைந்தால், ரஷ்யா-உக்ரைன் போர் உடனடியாக முடிவுக்கு வரும்.” என்று கூறினார்.

முன்னதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை என்றால் அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset