நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மென்செஸ்டர் யுனைடெட் அணியின் வரலாற்றில் இது மோசமான தோல்வி: ரூபன் அமோரிம் 

லண்டன்: 

மென்செஸ்டர் யுனைடெட் அணியின் வரலாற்றில் இது மோசமான தோல்வி என்று  அதன் நிர்வாகி ரூபன் அமோரிம் தெரிவித்துள்ளார். 

நேற்று, பிரைட்டனுக்கு எதிரான ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் சொந்த அரங்கில் 3-1 கோல் கணக்கில் தோல்வியடைந்தது. 

இந்தத் தோல்வியினால் மென்செஸ்டர் யுனைடெட் 26 புள்ளிகளுடன் 13-ஆவது இடத்தில் உள்ளது. 

பிரீமியர் லீக்கில் 10 ஆட்டங்களில், நாங்கள் இரண்டில் வென்றோம். 

மென்செஸ்டர் யுனைடெட் வரலாற்றில் நாங்கள் மிக மோசமான அணியாக இருக்கலாம் என்று அவர் கூறினார். 

ஆனால் இதனை மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தாம் மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டார். 

எதுவாக இருந்தாலும் சரி3-4-3 என்ற விளையாடும் முறையை மாற்றப் போவதில்லை என்று ரூபன் திட்டவட்டமாகக் கூறினார். 

இந்தத் தோல்வியை ஏற்று அடுத்த ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தைத் தனது அணி வெளிப்படுத்தும் என்றார் அவர். 

எதிர்க்காலத்தில் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக ரூபன் அமோரிம் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset