நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டி: கோபமடைந்த ரஷ்ய வீரருக்கு $76,000 அபராதம்

மெல்பெர்ன்:

உலகத் தரவரிசையில் 5ஆம் நிலையில் உள்ள ரஷ்ய டென்னிஸ் வீரர் டேனியேல் மெத்வதேவுக்கு (Daniil Medvedev) 76,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்றுவரும் ஆஸ்திரேலிய டென்னிஸ் பொதுவிருதுப் போட்டியில் இரண்டு ஆட்டங்களில் அவர் கோபத்தைக் கட்டுப்படுத்தத் தவறினார்.

தாய்லந்தின் கசிடிட் சம்ரெஜுடன் (Kasidit Samrej) பொருதிய ஆட்டத்தில் கோபப்பட்டுத் தனது மட்டையை வீசினார். ஆடுகளத்தின் வலையருகே இருந்த கேமராவை அது சேதப்படுத்தியது.

அதற்காக அவருக்கு 10,000 டாலர் (13,677 வெள்ளி) அபராதம் விதிக்கபட்டது.

அடுத்த சுற்றில் 19 வயது லர்னர் தியேனுக்கு (Learner Tien) எதிரான ஆட்டத்தில் கோபத்தில் மீண்டும் தனது மட்டையை வீசினார். அது ஆடுகளத்தைத் தாண்டிச் சென்று விளம்பரப் பலகையில் பட்டது.

நடுவருடனும் அவர் வாக்குவாதம் செய்தார். ஆட்டத்திற்குப் பிறகு கட்டாயம் பங்கேற்கவேண்டிய செய்தியாளர் சந்திப்பையும் அவர் புறக்கணித்ததார்.

அதற்காக அவருக்கு 66,000 டாலர் (90,268 வெள்ளி) அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த நான்கு ஆஸ்திரேலிய டென்னிஸ் பொதுவிருதுப் போட்டிகளில் 3 முறை மெத்வதேவ் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

ஆதாரம்: AFP

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset