நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மலேசிய நேரப்படி நாளை பிற்பகல் 2.30 மணிக்கு காசா போர் நிறுத்தம் தொடங்குகிறது

அன்காரா:

காசா பகுதிக்கான போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை உள்ளூர் நேரப்படி காலை 8.30 மணிக்கு (மலேசிய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு) அமலுக்கு வருகிறது.

கட்டார் வெளியுறவு அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மஜீத் அல்-அன்சாரி எக்ஸ் தளத்தில் இந்த  முன்னேற்றத்தை உறுதிப்படுத்தி உள்ளார்.

ஒப்பந்தத்தின் தரப்பினரும் மத்தியஸ்தரும் ஒருங்கிணைத்தபடி, காசா பகுதியில் போர் நிறுத்தம் நாளை ஜனவரி 19ஆம் அமலுக்கு வருகிறது.

மேலும் குடியிருப்பாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து வரும் அறிவுறுத்தல்களுக்காக காத்திருக்கவும் என்று அவர் கூறினார்.

காசா பகுதியில் 15 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் கொடிய தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கட்டார் புதன்கிழமை மூன்று கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்தது.

போர் நிறுத்தம் நாளை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset