
செய்திகள் மலேசியா
முதலீட்டில் சீனாவைவிட அமெரிக்கா இன்னும் உயர்ந்த நிலையில் உள்ளது: அன்வார்
லண்டன்:
முதலீட்டில் சீனாவை காட்டிலும் அமெரிக்கா இன்னும் உயர்ந்த நிலையில் உள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
சீனாவுடனான வணிக உறவுகள் அதிகரித்து வருவதால், மலேசியா சீனாவை நோக்கிச் செல்வதாகவும் அமெரிக்காவிலிருந்து விலகிச் செல்கிறது என்ற ஊகத்தையும் நான் முழுமையாக நிராகரிக்கிறேன்.
பொருளாதாரத்தைப் பாதுகாப்பதில் நடைமுறைக்கு ஏற்றவாறு செயல்படுவது தான் மலேசியாவின் இலக்காகும்.
குறிப்பாக உலகளவில் அதிகரித்து வரும் நிலையற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, இரு வல்லரசு நாடுகளுடனும் நல்ல உறவுகளைப் பேண விரும்புகிறது.
அமெரிக்கா, சீனாவுடனான மலேசியாவின் உறவுகள் பரஸ்பர மரியாதை, பகிரப்பட்ட நலன்களில் நங்கூரமிடப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் கூறினார்.
மலேசியா சீனாவை நோக்கிச் செல்வது பற்றிய அனைத்து பேச்சுக்களையும் மீறி, மலேசியாவில் தொழில்நுட்பத் துறையில், அந்நிய நேரடி முதலீட்டின் மிகப்பெரிய ஆதாரமாக அமெரிக்கா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது என்பதே உண்மை.
லண்டன் பொருளாதார பள்ளியில் உரையாற்றிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 16, 2025, 12:46 pm
அமெரிக்காவுடன் வரி விவகார பேச்சுவார்த்தை தொடருகின்றது: தெங்கு ஜப்ருல்
July 16, 2025, 12:42 pm
தியோ பெங் ஹொக் குடும்பத்துக்கு உதவித்தொகை வழங்க தயாராகும் ஊழல் தடுப்பு ஆணையம்
July 16, 2025, 12:31 pm
குழந்தையின் பாலியல் துன்புறுத்தல் காணொலி விற்பனை செய்யப்பட்ட சம்பவம் உண்மை: சைபுடின்
July 16, 2025, 11:52 am
வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து அழிந்தது
July 16, 2025, 11:14 am
வாகன மீட்பு முகவரின் அராஜகம்: அனுமதியை ரத்து செய்த அமைச்சு
July 16, 2025, 10:50 am
நியூசிலாந்து நாட்டின் உயர் அதிகாரிகளுடன் துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி சந்திப்பு
July 16, 2025, 10:26 am