
செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை சோதனைக்கு புதிய திட்டம்: இனி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம்
சென்னை:
சென்னை அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் அனைவருக்கும் குடியுரிமை சோதனைக்காக நீண்ட நேரம் வரிசையில் காத்து நிற்க வேண்டிய சூழ்நிலை தற்போது வரை உள்ளது.
பொதுவாக சென்னை விமான நிலையத்தில் இருந்து நள்ளிரவில், அதிகாலை நேரங்களில் ஏராளமான வெளிநாட்டு விமானங்கள் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்வதாலும், ஏராளமான வெளிநாட்டு விமானங்கள் சென்னைக்கு ஒரே நேரத்தில் வந்து சேர்கின்றனர்.
இதனால் குடியுரிமை மையங்களில் சோதனைகாக நீண்ட வரிசையில் பயணிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் குடியுரிமை சோதனைக்காக விமான நிலையங்களில் பல மணி நேரம் காத்திருக்கும் பயணிகளின் வசதிக்காக, மத்திய உள்துறை அமைச்சு 'ஃபாஸ்ட் ட்ராக் இமிகிரேஷன் டிரஸ்டட் டிராவலர் ப்ரோக்ராம்' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த புதிய திட்டத்தில் இந்திய பயணிகள் மற்றும் பூர்வீக இந்தியர்களாக இருந்து தற்போது வெளிநாடுகளில் நீண்ட காலமாக வசிப்பவர்கள், இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள் மட்டுமே பலன் பெற முடியும் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் பயணிக்க விரும்பும் பயணிகள் தங்கள் பயணத் திட்டத்திற்கு முன்னதாகவே அதற்காக தனியாக உருவாக்கப்பட்டுள்ள இணையதள முகவரியில் தங்களது பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும் கட்டணமாக பெரியவர்கள் ரூ. 2,000, குழந்தைகள் ரூ. 1,000 மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் 100 US டாலர்கள் பதிவின்போது செலுத்த வேண்டும்.
இந்தக் கட்டணம் ஒவ்வொரு முறை பயணம் செய்யும்போதும் செலுத்த வேண்டியது இல்லை.
ஒருமுறை செலுத்தினால் அவர்களுடைய கடப்பிதழ் காலாவதி ஆகும் தேதி வரை இக்கட்டணம் செல்லுபடி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 19, 2025, 4:18 pm
ஏழை-எளியவர்களின் மகிழ்ச்சி கலந்ததே பண்டிகை: தீபாவளி நிகழ்ச்சியில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு
October 19, 2025, 9:48 am
தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக இயக்கப்பட்ட பேருந்துகளில் 6,15,992 பயணிகள் பயணம்
October 18, 2025, 10:52 pm
தவெக சார்பில் தீபாவளியை கொண்டாட வேண்டாம்: தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்
October 18, 2025, 8:49 am
தமிழ்நாடு அரசு தலைமை காஜியாக மௌலானா முஃப்தி உஸ்மான் முஹ்யத்தீன் பாகவி நியமனம்
October 17, 2025, 1:53 pm
மதுரையில் பரபரப்பு: ஏடிஎம் இயந்திரம் தீபற்றிக் கொண்டதால் பல லட்சம் சாம்பல்
October 15, 2025, 12:39 pm
விஜய்யுடன் புஸ்ஸி ஆனந்த் அவசர ஆலோசனை
October 14, 2025, 12:44 pm
சிபிஐ விசாரணையை விட விஜயகாந்த்தின் ‘புலன் விசாரணை’ நல்லாருக்கும்: சீமான் நக்கல்
October 11, 2025, 9:34 pm